“ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவில் ஓங்கி இவ்வையகம் தலைக்குமாம்” என்னும் பாரதியார் கூற்றுக்கிணங்க, மேரி க்யூரி அம்மையார் அவர்கள் அறிவியல் துறையில் வல்லுனராகி புகழ்பெற்று விளங்கினார். நோபல் பரிசு பெற்ற, மடம் கியூரி அம்மையார், பெண் என்பதினால் பிரஞ்சு அகாடமியில் உறுப்பினராகும் தகுதி மறுக்கப்பட்டவராவார்.
போலந்து நாட்டின் தலைநகரில் வாழ்ந்த ஒரு உழவர் குடும்பத்தின் வாரிசான கியூரி அம்மையாரின் இயற்பெயர் மேரியா. இயற்கையிலேயே புத்திக்கூர்மை உடைய இவர் படிப்பதிலும் பாடல் கேட்பதிலும் ஆர்வம் காட்டினார்.
1861 போலந்து நாட்டில் பிறந்த இவரின் தந்தையார் கணிதம் மற்றும் இயற்பியல் ஆசிரியர். தாயாரும் உள்ளூர் பள்ளியில் ஆசிரியராக இருந்தவர் தான். ஆனால் மேரியாவின் சிறு வயதிலேயே, தாயார் கச நோய் காரணமாக இறந்துவிட்டார். உள்ளூர் பள்ளியில் திறம்பட கல்வி கற்று தேர்ச்சி பெற்ற மேரியா, 1883 தங்கப் பதக்கத்தோடு வெளியேறினார். பெண் என்ற காரணத்தால் மேல் படிப்பிற்கான அனுமதி மறுக்கப்பட்டது. தந்தையாரின் உதவியுடன் 1891 வரை கல்வியை தொடர்ந்த இவர், ரஷ்ய வேதியலாளரான மேரியாவின் உறவினர் ஒருவரின் தொழிற்சாலையில் உள்ள வேதியல் ஆய்வுக்கூடத்தில் அறிவியல் பயிற்சியை தொடங்கினார். 1891 முடிவில் பிரான்சிக்குச் சென்ற மேரியா, அங்கு இருந்த பல்கலைக்கழகத்தில் இயற்பியல், வேதியல், கணிதம் பயின்றார். மிக சொற்ப பணத்தில், மிகுந்த சிரமத்தில் படிப்பைத் தொடர்ந்த மேரி, 1893இல் இயற்பியலில் பட்டம் பெற்றார். ஆய்வு கூடத்தில் வேலை பார்த்தபடி படிப்பை தொடர்ந்த மேரி, தனது இரண்டாவது பட்டத்தை 1894 இல் பெற்றார்.
தனது ஆய்வுகளை பாரிசில் தொடங்கிய மேரி, முதலில் ஈயத்தின் காந்த சக்தி பற்றி ஆய்வு மேற்கொண்டார். அந்த வேளையில் பியரிகியூரி என்பவரை சந்தித்தார். இருவரிடமும் இருந்த அறிவியல் ஆர்வம் இருவரையும் ஒன்று சேர்த்தது. மேரி பியூரி இருவரும் திருமணபந்தத்தில் இணைந்தனர். 1895இல் ஒரு மகள் பிறந்தால். கியூரி தம்பதிகள் ஆய்வுகளை ஆராயும் ஆய்வு கூடம் நல்ல காற்றோட்டமோ, நீர் புக அமைப்போ கொண்டிருக்கவில்லை. அவர்கள் கதிரியக்கத்தை கையாளுவதால் வரும் ஆபத்துக்களை அறிந்திருக்கவில்லை. 1898 இல் யுரேனியத்தை அடுத்து தோரியம் என்னும் தனிமமும், கதிரியக்க ஆற்றல் கொண்டிருப்பதை கண்டுபிடித்தார்.
1898 இல் கியூரி தம்பதிகள் புதிதாகக் கண்டுபிடித்த புதிய தனிமத்தை தனது தாய் நாட்டை பெருமைப்படுத்தும் விதமாக பொலோனியம் என பெயரிட்டனர். மேலும் ரேடிய ஆக்டிவிட்டி (Radioactivity ) என்னும் சொல்லை கதிரியக்கத்திற்கு பெயரிட்டனர். 1903 இல் ராயல் சுவீட்ஸ் அகாடமி, மேரி கியூரி ஆகிய இருவருக்கும் இயற்பியல் நோபல் பரிசு அளித்தது. 1904 இல் மேரி இரண்டாவது மகளை பெற்றால். 1906ல் பியரி ஒரு சாலை விபத்தில் இறந்தார். அதன் பின் பியரியின் பதவியை பல்கலைக்கழக இயற்பியல் கழகம் மேரிக்கு வழங்கியது. மேரி பல்கலைக்கழகத்தின் முதல் பெண் பேராசிரியரானார். 1910இல் மேரி ரேடியத்தை பிரிப்பதில் சாதித்தார். பிரெஞ்சு அக்கடமி ஆப் சயன்செஸ் தேர்தல்களில் மேரி ஒரு அயல் நாட்டுக்காரர், அவர் நாத்திகர் என்றார்கள். ஆனால் நோபல் பரிசு போன்ற, பெரிய பரிசுகள் பெற்றபோது, பிரிஞ்சு கதாநாயகியாகப் போற்றினார்கள்.
1911 ல் ராயல் சுவீடிஷ் அகடமி ஆப் சயின்ஸ், மேரிக்கு இரண்டாம் நோபல் பரிசை வேதியலில் வழங்கியது. இப்பரிசு ரேடியத்தை பிரித்து எடுத்து அதன் பண்புகளை ஆராய்ந்ததை அங்கீகரித்து வழங்கப்பட்டது.
(1896 இல் கதிர்வீச்சு தொடர்பான ஆராய்ச்சிகளை தொடங்கி 1898 இல் அதிகாரப்பூர்வமாக ரேடியம் கொலினியம் போன்ற கதிர்வீச்சு மூலங்களை கண்டுபிடித்ததை அறிவித்தார். )
1914 இல் முதலாம் உலகப் போரின் போது, ஆம்புலன்ஸ் வண்டிகளில் எக்ஸ் கதிர் கருவிகளை பொறுத்த உதவி செய்தார். முதலாம் உலகப் போரின் போது காயப்பட்ட வீரர்களுக்கு மருத்துவ உதவிக்கு எக்ஸ்ரே கருவிகளில் பயன்பாடு, ரெடியாகலீஸ் சேவை என இவரின் சேவைகள் விரிந்தது.
மேரி கியூரி அவர்கள் தொடர்ந்து கதிரியக்க வெளிபாட்டோடு பழகியதோடு, ஒழுங்கான உபகரணங்களை அணிந்திருக்காமல் இருந்ததால், நோய்வாய்ப்பட ஆரம்பித்தது. இரத்த சோகை நோயினால் பாதிக்கப்பட்டு 1934இல் உயிர் இழந்தார்.